பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுடில்லி: பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார் என்ற அறிவிப்பு, வரும் 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. தற்போது, அக்கட்சியின் செயல் தலைவராக உள்ள நிதின் நபின், இப்பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது.

பதவிக்காலம் நீட்டிப்பு



ஆளுங்கட்சியான பா.ஜ.,வின் தேசிய தலைவராக நட்டா, கடந்த 2020ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இப்பதவிக்கான காலம், இரண்டு ஆண்டுகள் மட்டுமே. அதன்பின் ஒரு முறை நீட்டிப்பு வழங்க வாய்ப்புள்ளது.

இதன்படி, அக்கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்படும் நபர், அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை அப் பதவியில் இருக்கலாம்.

இதன்படி, இரண்டு முறை பா.ஜ., தேசிய தலைவராக தன் பதவிக்காலத்தை நட்டா நிறைவு செய்தார். எனினும், கடந்த 2024ல் லோக்சபா தேர்தல் காரணமாக, அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின், தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தள்ளிப்போனது.

இதற்கு, அக்கட்சியின் மாநில தலைவர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் ஏற்பட்ட தாமதம் தான் காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டது.

வாய்ப்பு



இதுகு றித்து, தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் எம் .பி., லட்சுமண் கூறுகையில், “பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல், வரும் 19ம் தேதி பிற்ப கல் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கும்.

''ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருக்கும்பட்சத்தில், மறுதினமான 20ம் தேதி தேர்தல் நடக்கும். அன்றைய தினமே பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார் என் ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்,” என்றார்.

இத்தேர்தலில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 10 பேர் முன்​மொழிபவர்களாகப் பங்கு வகிப்பர்.

இதில், பிரதமர் மோடி, அமித் ஷா இணைந்து தற்போது அக்கட்சியின் செயல் தலைவராக உள்ள நிதின் நபினை முன்மொழிய வாய்ப்புகள் உ ள்ளதாக கூறப் படுகிறது. எனவே, அவர் போட்டியின்றி தேர்வாகலாம்.

நிதின் நபின், கடந்த ஆண்டு டிசம்பர் 15ல் பா.ஜ., செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர், தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அப்பதவியை இளம் வயதில் வகிக்கும் முதல் தலைவர் என்ற பெருமையை பெறுவார்.

Advertisement