பல்வேறு கட்சியினர் தி.மு.க., வில் ஐக்கியம்

தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த பெண்கள், எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.

தியாகதுருகம், பல்லகச்சேரி, பிரிதிவிமங்கலம், பீளமேடு, திம்மலை, மேல்விழி ஆகிய கிராமங்களில் இருந்து பல்வேறு கட்சியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள், கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, ராஜவேல், வசந்தவேல், ஒன்றிய சேர்மன் தாமோதரன், பேரூராட்சி கவுன்சிலர் மகாதேவி கொளஞ்சி வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement