தொழில் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் 'டிசைன் ஸ்டுடியோ' 'சைமா' நிர்வாகிகள் பாராட்டு

திருப்பூர்: தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) செயற்குழு கூட் டம், நிப்ட்-டீ கல்லுாரி கூட்டரங்கில் நடந்தது.

'சைமா' தலைவர்சண்முகசுந்தரம், துணைசெயலாளர் பாலசந்தர், பொதுசெயலாளர் தமோதரன், பொருளாளர் சுரேஷ், இணை செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், 'நிப்ட்-டீ' நிர்வாகிகள் ராஜா சண்முகம், கோவிந்தராஜ், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினர்.

தொடர்ந்து, வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, 'டிசைன் ஸ்டுடியோ'வை சுற்றிப்பார்த்து, அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். அதனைதொடர்ந்து, சைமா நிர்வாகக்குழுவின், 9வது செயற்குழு கூட்டம் நடந்தது.

'சைமா' தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது:

அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள டிசைன் ஸ்டுடியோ, விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அதன் மூலமாக, ஆடை வடிவமைப்பு, மாதிரி ஆடை தயாரிப்பு, புதிய டிசைன் மேம்பாடு, உள்நாட்டு பிராண்ட் தயாரிப்பு போன்ற பணிகள் எளிதாக மாறும். கால விரை யமும், பெரும் பொருட்செலவும் இருக்காது. தொழில்முனைவோர், தொழில்துறையினர், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், டிசைன் ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளது.

இது, திருப்பூருக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும். திருப்பூரை உலகளாவிய ஆடை வடிவமைப்பு மையமாக மாற்றும் முக்கிய முயற்சியாக இருக்கிறது. திருப்பூரில் டிசைன் ஸ்டுடியோ அமைந்துள்ளதன் வாயிலாக, பின்னலாடை தொழிலின் நீண்ட நாளைய வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement