ஐவர் பூப்பந்தாட்ட போட்டி 415 வீரர்கள் பங்கேற்பு

திருப்பூர்: இமாலாயா விளையாட்டுக்குழு சார்பில், மாநில அளவிலான சீனியர் ஆண்கள் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி, அகில இந்திய அளவிலான பெண்கள் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி, திருப்பூர், கொங்குமெயின் ரோடு, சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.

பெண்களுக்கான போட்டியில் நாடு முழுதும் இருந்தும், ஆண்களுக்கான போட்டியில் தமிழகம் முழுதும் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில், மொத்தம், 53 அணிகள், 265 வீரர்களும், பெண்கள் பிரிவில், 22 அணிகள், 110 வீராங்கனையர் பங்கேற்றனர்.

முன்னதாக போட்டிகளை பாப்பீஸ் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் சிவக்குமார், மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தனர். நேற்று லீக் மற்றும் காலிறுதி போட்டிகள் நடந்தது. இன்று அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நடக்கிறது.

முதலிடம் பெறும் ஆண்கள் அணி, 30 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், பெண்கள் அணி, 20 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பரிசுக் கோப்பையை தட்டிச் செல்லும்.

Advertisement