அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு



கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டி அடுத்த தட்ரஹள்ளியை சேர்ந்-தவர் ராணி, 45, விவசாயி. இவர் தன் நிலத்தை ஒட்டிய அரசு புறம்போக்கு நிலத்தை கடந்த, 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்தார்.


இதுகுறித்து வந்த புகார் படி, வருவாய் துறை-யினர் நிலத்தை அளந்து புறம்போக்கு நிலம் ஆக்-கிரமித்துள்ளதை கண்டறிந்தனர். அந்த நிலத்தை மீட்டு, பலகை வைக்க நேற்று முன்தினம் அங்கு சென்ற காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., முருகனிடம், ராணி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து முருகன் அளித்த புகார் படி, நாகர-சம்பட்டி போலீசார், ராணி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement