ரூ.8.55 கோடியில் திட்டப்பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்


கிருஷ்ணகிரி: பர்கூர் மற்றும் மத்துார் ஒன்றியங்களில், ரூ.8.55 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் ஆய்வு செய்-தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் மற்றும் மத்துார் ஒன்றியங்களில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 8.55 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கிறது. இவற்றை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் ஆய்வு
செய்-தனர்.


அதன்படி, அஞ்சூரில் பஞ்.,ல் கட்டப்பட்டு வரும் அலுவலகம், மத்துார் பி.டி.ஓ., அலுவலகம், ஆனந்துார் பஞ்.,ல், 68 பேருக்கு கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.


ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, செயற்பொறியாளர் மோகனசுந்தரம், உதவி செயற்பொறியாளர் ராஜ்பாரதி, பி.டி.ஓ.,க்கள் செல்லக்கண்ணாள், உமா, ஒன்றிய பொறியாளர் மாதையன் உள்ளிட்டோர் உடனி-ருந்தனர்.

Advertisement