சாரல் மழையுடன் கடும் பனியால் பொதுமக்கள் அவதி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கடும் குளி-ருடன், சாரல் மழையும் பெய்ததால், மக்கள் அவ-தியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்-களாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இரு நாட்களுக்கு, வட மாவட்டங்-களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கடும் பனிப்பொழி-வுடன் நேற்று சாரல் மழையும் பெய்ததால், மக்கள் அவதிக்கு ஆளாகினர். கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நண்பகலில் கூட சூரியன் எட்டிப் பார்க்க-வில்லை.
மாறாக கடும்குளிர் வாட்டி வதைத்தது. பகல் நேரத்திலேயே வீட்டின் அருகில், விறகுகளை தீயிட்டு மக்கள் குளிர் காய்ந்தனர். சாலைகளில் டூவீலர்களில் சென்றவர்கள், குளிரில் நடுங்கிய-படி வாகனங்களை ஓட்டிச் சென்றனர். மாவட்-டத்தில் அதிகரித்து வரும் குளிரால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி தொல்-லையால் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும்
-
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் பார்வேட்டை விழா கோலாகலம்
-
பட்டத்து காளைக்கு அபிஷேக ஆராதனை பசுக்களுக்கு உணவளித்து மகிழ்ந்த பக்தர்கள்
-
தேயிலையை தாக்கும் சிவப்பு சிலந்தி நோயால் பாதிப்; பு மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம்
-
காமாட்சி அம்மன் கோவிலில் கனு உத்சவம் நிறைவு
-
மாவட்ட மருத்துவமனையில் குருதி பிரித்தெடுப்பு பிரிவை செயல்படுத்துங்க புதிய கருவிகள் வாங்க நிதி இருந்தும் பணியில் சுணக்கம்
-
ரயில் நிலையத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரிக்கை