மாவட்ட மருத்துவமனையில் குருதி பிரித்தெடுப்பு பிரிவை செயல்படுத்துங்க புதிய கருவிகள் வாங்க நிதி இருந்தும் பணியில் சுணக்கம்
பெரியகுளம்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் குருதி பிரித்தெடுப்பு மைய கட்டடம், உயிர்காக்கும் மருத்துவ கருவிகள் வாங்குவதற்கு தனியார் கம்பெனி சமூக பாதுகாப்பு திட்ட
நிதியாக ரூ.54.85 லட்சம் வழங்கியும் மையம் செயல்பாட்டிற்கு வரவில்லை. இம் மையம் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர மருத்துவ இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பெரியகுளம் மாவட்ட மருத்துவமனைக்கு தினமும் 800 முதல் ஆயிரம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர். இங்கு பிரசவம், சிசேரியன், எலும்பு ஆப்பரேஷன், புற்றுநோய் உட்பட பல ஆப்பரேஷன்களுக்கு ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள்,வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், பிளாஸ்மா ஆகியவை தனித்தனியாக பிரித்து வழங்க குருதி பிரிதெடுப்பு மையம் அவசியம். இதற்கென ரத்த வங்கி அலுவலக கட்டடத்தின் மாடியில் குருதி பிரித்தெப்பு மையத்திற்கு புதிக கட்டடம் தயார் நிலையில் உள்ளது.
ரத்த வங்கியின் பங்களிப்பு மாவட்டத்தில் கடந்தாண்டு 110 ரத்ததான முகாம்கள் நடத்தி 1400 க்கும் அதிகமானோரிடம் 10,500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இவை தேனி மருத்துவக் கல்லூரி,பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்களுக்கு தேவையான ரத்தம் வழங்கி உயிர் காக்கப்பட்டது. ரத்தம் பிரித்தெடுப்பு மையம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது.
மருத்துவ கருவிகள் வாங்க வேண்டும் கடந்த மாதம் தனியார் கம்பெனி சமூக பாதுகாப்பு திட்டத்தில் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு உயிர் காக்கும் கருவிகள் வாங்க கம்பெனி பொதுமேலாளர் முத்துமாறன், கலெக்டரிடம் முதல் கட்டமாக ரூ.54.85 லட்சம் வழங்கினார். இந்த நிதியில் குருதி பிரித்தெடுப்பு மையத்திற்கு தேவையான நவீன கருவிகள் வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாவட்ட ரத்த வங்கி அலுவலர் பாரதி கூறுகையில், 'பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் குருதி பிரித்தெடுப்பு மையம் இல்லாததால் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குருதி பிரிக்கும் மையம் செயல்படுத்த வேண்டும். நவீன கருவிகள் வாங்கி மத்திய, மாநில மருத்துவ ஆய்வுக்கு பின் லைசென்ஸ் பெற்று குருதி பிரித்தெடுப்பு மையம் செயல்பட துவங்கினால் மாவட்டத்தில் உயிரிழப்புகள் தடுக்க பயன்படும்,' என்றார்.
மேலும்
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை
-
மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்
-
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ஈரானில் 800 பேரின் மரண தண்டனை ரத்து; அதிபர் டிரம்ப் பாராட்டு
-
எம்ஜிஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க பாடுபடுவோம்; பிரதமர் மோடி