வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை சரிந்தது: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
கரூர்: தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், மெல்ல மெல்ல விலை குறைய தொடங்கியுள்-ளது.
தமிழகத்தில், கடந்த நவம்பரில் பனிப்பொழிவு மற்றும் மழை இருந்தது. குறிப்பாக, அதிகா-லையில் நிலவும், கடும் பனிப்பொழிவால், தக்-காளி செடியில் உள்ள பூக்கள் உதிருவது வழக்கம். இதனால் தக்காளி வரத்து குறைந்து கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி
மார்க்-கெட்டுக்கு வரும் தக்காளியின் அளவு குறைந்-தது. கடந்த மாதம் ஒரு கிலோ, 45 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, மழை குறைவால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை குறைய தொடங்கியுள்ளது.இதுகுறித்து, தக்காளி மொத்த வியாபாரிகள் கூறியதாவது: வரத்து குறைவால் முதல் ரகம் தக்காளி, 50 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம்
தக்-காளி, 45 ரூபாய்க்கும் விற்றது.
சில்லரை விற்பனைகளில், கொஞ்சம் கூடுதலாக விலை இருந்தது. இந்த விலை, தை மாதம் முடியும் வரை நீடிக்கும் என எதிர்பார்த்தோம். இந்நிலையில், மழை குறைந்தது. இதனால், தக்-காளி செடிகளில், பூக்கள் உதிர்வது குறைந்-ததால், வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி, 25 முதல், 30 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.
இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்-ளனர். மேலும், பனிக்காலம் முடிந்தவுடன், புதிய செடிகளை விவசாயிகள் நடவு செய்வர். அதன் பிறகு, கூடுதல் தக்காளி விற்பனைக்கு வரும் போது, மேலும் விலை குறையும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் தொடர்ந்தால் 25,850 வரை சென்று திரும்பலாம்
-
ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4 லட்சத்தை எட்ட வாய்ப்பு
-
மாபெரும் மாற்றத்தில் இந்திய நுகர்வு முறை: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
-
அதிகாரிகள் மிரட்டலால் 'பார்'களில் ஹிந்தி அழிப்பு
-
பட்டியலிடப்படாத நிறுவனங்கள் கட்டுப்படுத்த செபி ஆலோசனை
-
மியூச்சுவல் பண்டு கட்டணங்கள் குறைகிறது