எல்லமேடு பகுதியில் வங்கி இல்லாததால் மக்கள் அவதி

அரவக்குறிச்சி: எல்லமேடு பகுதியில், வங்கி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
கரூரிலிருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில், ஏலம் மேடு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.


இப்பகுதியில் மூன்று வெவ்வேறு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு பணி நிமித்தமாக எல்லமேடு பகுதிக்கு தினசரி வந்து செல்கின்-றனர். பஞ்சாயத்து நிர்வாகங்களும், பொதுமக்-களும் சின்னதாராபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளராக உள்ளனர்.
ஆனால் இப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுவட்டார பகுதி அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், முதியோர் உதவித்தொகை பெறுவோர் எல்ல-மேடு பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி இல்லா-ததால் சிரமப்படுகின்றனர்.


சின்னதாராபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்-கிக்கு செல்ல, 5 கி.மீ., தொலைவும், கரூரிலுள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு செல்ல, 25 கி.மீ., தொலைவும், அரவக்குறிச்சியில் பாரத் ஸ்டேட் வங்கிக்கு செல்ல, 15 கி.மீ., தொலைவும் உள்-ளதால் இப்பகுதி மக்கள் மிகவும்
சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


எனவே எல்லமேடு பகுதியில், பாரத ஸ்டேட் வங்கியின் கிளை அமைக்க வேண்டு
மென பொதுமக்கள், அரசு ஊழியர்கள் வேண்-டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement