திருச்செங்கோட்டில் இருந்து பழனிக்கு அரசு பஸ் விரைவில் இயக்க நடவடிக்கை'


பள்ளிப்பாளையம்: ''திருச்செங்கோட்டில் இருந்து பழனிக்கு, அரசு பஸ் விரைவில் இயக்கப்படும்,'' என, பள்ளிப்பா-ளையத்தில் நடந்த விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.


பள்ளிப்பாளையத்தில், தமிழ்நாடு அரசு போக்கு-வரத்து கழக பணிமனை செயல்பட்டு வந்தது. மூன்று ஆண்டுக்கு முன்பு, இப்பகுதியில் மேம்-பாலம் கட்டும் போது, பணிமனை மூடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் பணிமனை புதுப்பிக்கப்-பட்டு, நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில் நடந்து. கோவை கோட்ட அரசு
போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கணபதி வரவேற்றார்.


போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசி-யதாவது: அதிகளவு பஸ்கள் கொண்ட போக்குவ-ரத்து கழகமாக, இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனம் தான் உள்ளது. தற்போது வரை, 6,952 பஸ்கள் புதியதாக வாங்கப்-பட்டு பயன்பாட்டிற்கு
வந்துள்ளது.


மகளிர் விடியல் திட்டம் பெண்களின் வாழ்க்-கையில் மறு மலர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கான நிதியை, முதல்வர் தொடர்ந்து வழங்கி வருகிறார். இந்த ஆட்சியில் தான், பணி காலத்தில் இறந்தபோன வாரிசுகளுக்கு நியமன ஆணை உடனே வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். பணியாளர்கள் அர்ப்ப-ணிப்புடன் பணியாற்ற வேண்டும். திருச்செங்-கோடு கொ.ம.தே.க., எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி திருச்செங்-கோட்டில் இருந்து பழனிக்கு நேரடியாக விரைவில் பஸ் இயக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.


விழாவில் அமைச்சர்கள் முத்துசாமி, மதி-வேந்தன், ஈரோடு எம்.பி., பிரகாஷ், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement