இந்த வாரம் எப்படி இருக்கும்?
நியுட்ரன்: வாங்க டவுனு. புலம்புன புலம்பலைப் பார்த்தா, அப்பு கை ஓங்கீருமோன்னு நினைச்சேன். அடிச்சு நொறுக்கீட்டீங்களே!
டவுனு: ரொம்ப புகழாதீங்க. அப்பு சொன்ன மாதிரிதான். 'ஜியோபொலிட்டிக்கல்' செய்திகள் திடீர் திடீருன்னு வந்தது. வாய்ப்புகள் கிடைச்சுது. அஞ்சு நாளும் எங்க ராஜ்ஜியமா இருந்துச்சு.
அப்பு: சம்பவம் பண்ணினோமுன்னு ஒரு பேச்சுக்குதானே சொன்னேன். ஒரு வாரத்தையே காலி பண்ணீட்டீங்களே!
நியுட்ரன்: பெரிய அளவில இறங்கினதால வாராந்திர டெக்னிக்கல் சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் எல்லாம் தாறுமாறா இருக்குது. அதனால நான் எதுவும் சொல்லப் போறதில்லை.
அப்பு: பயந்துட்டீங்களா நியுட்ரன்?
டவுனு: பணவீக்கம், பேலன்ஸ் ஆப் டிரேட், வேலையில்லாத நபர்கள், பயணியர் வாகன விற்பனை போன்ற இந்திய பொருளாதார தரவுகளும்; பணவீக்கம், உற்பத்தியாளர்களின் விலை குறியீடு, சில்லறை வணிகத்தில் விற்பனை, வீடுகள் விற்பனை, வேலையில்லாத நபர்கள், இண்டஸ்ட்ரீயல் புரடக்ஷன் போன்ற அமெரிக்க தரவுகளும் வெளிவர இருக்குது.
அப்பு: என்ன டேட்டா வந்து என்ன ஆகப்போது. செய்திகள் சாதகமா இல்லாட்டி கஷ்டம்தான்.
டவுனு: அது உங்களுக்கு.
நியுட்ரன்: செய்தியே இல்லாட்டி இந்த வாரம் என்னோட வாரமா இருக்க வாய்ப்பிருக்கு.
அப்பு: அது மட்டும் நடக்க வாய்ப்பேயில்லை. இறங்குன வேகத்துக்கு ஒரு பவுன்ஸ் பேக்காவது வரும்.
டவுனு: இது நியாயமான கணிப்பு.
நியுட்ரன்: கணிப்புல என்ன நியாய அநியாயம்.
அப்பு: வெறுப்புல பேசாதீங்க நியுட்ரன். ரெக்கவரி வரும். பார்க்கத்தானே போறீங்க.
டவுனு: வரும்! ஆனா வராது!
நியுட்ரன்: அப்படீன்னா?
டவுனு: அதிகபட்சமா ஒரு நாள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. தொடர்றது கஷ்டம்தான்!
அப்பு: செய்திகள் சாதகமா இருந்தா உங்களை ஓடஓட விரட்டிடுவோம் பார்த்துக்குங்க.
நியுட்ரன்: எவ்வளவு அடி வாங்கினாலும் உற்சாகமா இருக்கீங்க போல
அப்பு: கமாடிட்டி சந்தைகள் ஆக்டிவா இருக்கறதால இந்தப்பக்கம் டல்லடிக்க வாய்ப்பு இருக்கு. அதனாலதான் அடிச்சு சொல்லமுடியல.
டவுனு: அது மட்டுமில்ல. பல காரணங்கள் பங்கு சந்தைக்கு தோதானதா இப்போ இல்லை. உதாரணத்துக்கு போன ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர்ல சப்போர்ட்டா இருந்த 50 நாள் இஎம்ஏ-வை தாண்டி வெள்ளிக்கிழமை நிப்டி இறங்கியிருக்கு. அதனாலதான் உறுதியா ரிவர்சல் வருமுன்னு சொல்ல தயக்கமா இருக்கு.
அப்பு: இறக்கம் நல்லதுன்னு சொல்றோம். ஆனா ஒரு சில மாதிரியான இறக்கங்கள் யோசிக்க வைக்குது.
டவுனு: சொல்ல முடியாது, திடீர் ரிவர்சல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. செய்திகள் சாதகமா இருந்தா டக்குன்னு நடந்துடும்.
நியுட்ரன்: அதுக்கும் வாய்ப்பு குறைவாத்தான் தெரியுது. செய்திகள் இல்லாம ரிவர்சல் வந்தா என்னவாகும்?
டவுனு: அது தற்காலிகமானதா இருக்கும்.
அப்பு: கரெட்தான். மறந்துட்டேனே. ஊரில இருந்து பாட்டி வந்திருக்காங்க. அவங்க முந்திரி கொத்து செய்யறதுல ஸ்பெஷலிஸ்ட். வீட்டுல இருந்து உங்களுக்கு கொண்டு வந்தேன்.
அப்பு மற்ற இருவருக்கும் தர, அவர்கள் சாப்பிட்டு முடித்தபின் மூவரும் கிளம்பினர்.
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!