திருச்சி மேயருக்கு அமைச்சர்கள் அவமரியாதை: போட்டோவில் ஓரமாய் நிற்க வைத்த பரிதாபம்

8

திருச்சி: திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் திறப்பு விழாவில், அமைச்சர்கள் நேரு, மகேஷ், கலெக்டர், மாநகராட்சி கமிஷ னர், சி.இ.ஓ., உள்ளிட்டோர் சேரில் உட்கார்ந்து எடுத்த, 'குரூப்' போட்டோவில், திருச்சியின் முதல் குடிமகனான மேயர் அன்பழகனை ஓரமாக நிற்க வைத்தனர்.


திருச்சி காந்தி மார்க்கெட், சையத் முர்துசா பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அந்த அலுவலகம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், மேயர் அன்பழகன், திருச்சி கலெக் டர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், திருச்சி சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



புதிய அலுவலகத்தை, அமைச்சர் நேரு திறந்து வைத்தார். பின், குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. அந்த போட்டோவில் முன்வரிசையில் அமைச்சர்கள் நேரு, மகேஷ், கலெக்டர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா ஆகியோர் சேர் போட்டு அமர்ந்து இருக்க, முதன்மை கல்வி அலுவலக பணியாளர்கள் பின்னால் நின்றனர்.


அப்போது, திருச்சியில் முதல் குடிமகனான மேயர் அன்பழகன், ஒரு ஓரத்தில் பின்வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருந்தார். அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளரான இவரை, அமைச்சர் நேருவும் கூ ட உட்கார வைக்கவில்லை.


நேரு ஆதரவாளர் என்பதால், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷும், மேயர் அன்பழகன் நிற்பதை கண்டுகொள்ளவில்லை. இதை பார்த்தவர்கள், 'ஆளுங்கட்சியைச் சேர்ந்த, திருச்சி மேயர் அன்பழகனை இதைவிட யாரும் அவமதிக்க முடியாது' என்று கூறினர்.


திருச்சி மேயர் அன்பழகன் ஓரமாக நிற்கும் போட்டோவை, அமைச்சர் மகேஷ் தன் சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

Advertisement