ஒரு ரூபாய் கூட ஊழல் நடக்காது!
ஒரு ரூபாய் கூட ஊழல் நடக்காது!
புதிய வேலை உறுதி சட்டத்தின் கீழ், ஒரு ரூபாய் கூட ஊழல் நடக்காது. கிராமப்புறங்களை வளர்ச்சி அடைய செய்யவே இந்த அற்புதமான திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் தான் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அவற்றை நாட்டு மக்கள் நம்பக்கூடாது. கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,
வேஷம் போடும் பா.ஜ.!
சீனா விவகாரத்தில் பச்சோந்தி போல பா.ஜ., வேஷம் போடுகிறது. அந்நாட்டை ஆளும் சீன கம்யூ., கட்சியை எதிர்க்க வேண்டிய பா.ஜ.,வினர், தற்போது சிவப்பு கம்பளம் விரிக்கின்றனர். இரு தரப்புக்கும் ஏதோ ஒரு ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர்கள் கூட பயிற்சி பெற சீனாவுக்கு சென்றனர். பவன் கெரா செய்தி தொடர்பாளர், காங்.,
எந்த தவறும் இல்லை!
மஹாராஷ்டிராவில் ஆளும், 'மஹாயுதி' கூட்டணியில் அங்கம் வகித்தாலும், உள்ளாட்சி தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுவதில் எந்த தவறும் இல்லை. உள்ளூர் கட்சி நிர்வாகிகளுக்கு அதிகாரம் அளிக்கவே உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகளின் ஆதரவே முக்கியம். அஜித் பவார் மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,
எல்லாம் கட்சிக்கு கொடுக்குற கமிஷன். எப்படி ஊழல்ன்னு சொல்லலாம்? வாஷிங் பண்ணி வெளுத்துடுவாங்க.மேலும்
-
உலகம் முழுவதும் திடீரென முடங்கியது எக்ஸ் தளம்: பயனர்கள் அதிருப்தி
-
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
-
சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி
-
எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்த மும்பை மக்கள்: அண்ணாமலை
-
வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையின் தாக்கமே மஹா. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்; மத்திய அரசு