உலகம் முழுவதும் கொண்டாடும் பொங்கல் பண்டிகை; டில்லி விழாவில் பிரதமர் மோடி பேச்சு

5

நமது டில்லி நிருபர்



டில்லியல் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு நடத்தினார். பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக மாறியுள்ளது என நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.


ஆண்டுதோறும் டில்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கருப்பொருளில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி எல்.முருகன் இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்த பொங்கல் விழாவிற்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

வழிபாடு



இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கன்றுகளுக்கு உணவு வழங்கினார். பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.

தமிழில்….!




விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்' என்று கூறி தன் உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழா. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தான் பொங்கல் பண்டிகை. இதையொட்டி அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


பாரம்பரியம்



''ஆயிரம் ஆண்டுக்கு முன் கங்கை கொண்ட சோழபுரத்தில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதார பண்டிகை இது. தமிழ் கலாசாரம் என்பது முழு தேசத்தின் ஒரு பொதுவான பாரம்பரியம். இயற்கையின் மீதான நன்றியுணர்வு வெறும் வார்த்தைகளுக்குள் நின்றுவிடாமல், அது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்பதை பொங்கல் பண்டிகை மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது.


தமிழ் கலாசாரம்




கடந்த ஆண்டு, இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பாரம்பரியமான தமிழ் கலாசாரம் தொடர்பான பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. திருக்குறள் விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசுகிறது. மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது.

வாழ்க தமிழ், வளர்க பாரதம்!



வாழ்க தமிழ், வளர்க பாரதம் என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை நிறைவு செய்தார்.

விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசியல், சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement