பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4,184 பேருக்கு முதல்வர் பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

3

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, போலீசார், தீயணைப்பு மற்றும் சிறைத்துறை காவலர்கள் உட்பட, 4,184 பேருக்கு, முதல்வரின் காவல் பதக்கம், சிறப்பு பணி பதக்கம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
காவல், தீயணைப்பு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், தொழில் நுட்பம் மற்றும் சிறப்பு பணி சேவைகள் துறையில் பணிபுரிவோரின், நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் அன்று, தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டு, 4,000 போலீசார், 120 தீயணைப்பு வீரர்கள், 58 சிறைக் காவலர்கள், காவல் வானொலி, மோப்ப நாய், காவல் புகைப்படப்பிரிவில் பணிபுரியும் ஆறு பேர் என, மொத்தம் 4,184 பேருக்கு, தமிழக முதல்வரின் காவல் பதக்கம், சிறப்பு பணி பதக்கம், தொழில் நுட்ப மற்றும் சிறப்பு பணிப் பதக்கம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு, அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப, ரொக்கத் தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement