குழந்தை பெறும் வடமாநில பெண்கள்: தயாநிதி சர்ச்சை பேச்சு

46

சென்னை: ''வட மாநிலங்களில் பெண்கள் கல்வி கற்கக் கூடாது; வீட்டிலேயே இருக்க வேண்டும்; குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர்,'' என, தி.மு.க., - எம்.பி., தயாநிதி பேசினார்.

'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தின் கீழ், சென்னை காயிதே மில்லத் கல்லுாரியில், மாணவியருக்கு 'லேப்டாப்' வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. இதில், மத்திய சென்னை எம்.பி., தயாநிதி பேசியதாவது:

நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. சிறந்த முதல்வராக ஸ்டாலின் உள்ளார். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

மேற்படிப்பு படிக்க செல்லும் தமிழக பெண்கள் கெத்தாக இருக்க வேண்டும் என்பதற்காக, இலவசமாக லேப்டாப் வழங்கியுள்ளனர். ஆனால், வட மாநிலங்களில் பெண்கள் கல்வி கற்க கூடாது என்கின்றனர். வீட்டிலேயே அடுப்படியில் இருக்க வேண்டும்; குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தயாநிதியின் இந்தப் பேச்சை அடுத்து, 'வடமாநில பெண்கள் குறித்து அவதுாறாக பேசியதாக, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement