ஜனநாயகன் பட விவகாரம்; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி: ஜனநாயகன் பட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 20ம் தேதி விசாரிக்கும் என்று கூறிய உச்சநீதிமன்றம், படக்குழுவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்து விட்டது.
@விஜய் நடித்த ஜனநாயகன் படம், பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், தணிக்கைச் சான்று கிடைக்காததால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. இந்த படத்துக்கு சான்று கோரி, தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்று வழங்க உத்தரவிட்டார். ஆனால், சென்சார் போர்டு சார்பில் டிவிசன் அமர்வில் மேல் முறையீடு செய்து, அதற்கு தடை உத்தரவு பெறப்பட்டது. இதனால், தேதி குறிப்பிடாமல் படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து படத்தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அங்கும் சென்சார் போர்டு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஜனநாயகன் பட மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனநாயகன் விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
ஜனவரி 20ம் தேதி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என தெரிவித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்ற அமர்வில் தங்களின் தரப்பு வாதத்தை முன்வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
வாசகர் கருத்து (27)
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
15 ஜன,2026 - 20:28 Report Abuse
சுமுகமாக முடிக்க வேண்டிய விஷயத்தை வியாபாரத்திற்க்காக / விளம்பரத்திற்காக நீதி மன்றங்களை நாடினால் இது தான் நடக்கும்.. 0
0
gopi - ,
16 ஜன,2026 - 07:13Report Abuse
நீங்க சொல்லும் சுமூகம் என்பதற்கு அர்த்தம் அவர்களுடன் கூட்டணி சேரனும்.. அதானே. அதுக்கு பேசாம விஜய் கட்சியை கலைத்து விடலாம். பிஜேபி என்ற கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் விழுவதற்கு சமம் 0
0
Reply
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
15 ஜன,2026 - 20:26 Report Abuse
தயாரிப்பாளரே அவர் விஜய் தானே 0
0
Reply
Balasubramanian - ,
15 ஜன,2026 - 19:57 Report Abuse
மக்கள் தங்களுக்கு கிடைத்த ரூ மூவாயிரம் ரூபாயை வீணடிக்கவில்லை! ஆதலால் டாஸ்மாக் கிற்கு இரண்டு குவாட்டர் விற்பனை அதிகரிப்பு! 0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
15 ஜன,2026 - 18:47 Report Abuse
எனக்கு ஒரு ஐடியா அலகு குத்தி வேப்பிலை அடிவாங்கி பட்டயாவில் சர்ச்சு மேரியாத்தா வுக்கு கூழ்கஞ்சி படைச்சு குடிச்சிட்டு ராவுளும் நடிகன் விஜயும் ஜோடி போட்டு ஆடினா ஒருவேளை ஜனநாயகன் வெளி வரவாய்ப்பு உண்டு. 0
0
Reply
V.Mohan - ,இந்தியா
15 ஜன,2026 - 18:10 Report Abuse
தமிழர்களான விஜய் ரசிகர்களே.நடிகர் எம் ஜி ஆருக்கு தமிழக மக்கள் சும்மா ஆதரிக்கவில்லை. ஏழ்மையில் இருந்து உழைத்து நல்ல கருத்துக்களை மட்டுமே சொல்லி படங்களில் நடித்த அவர் நிலையில் தற்சமயம் யாருமில்லை மக்களுடைய கஷ்டங்கள் தீர்க்க தனது வாழ்நாளை பயன்படுத்திய எம்.ஜி.ஆர் இறந்தும் மக்கள் மனதில் உயிருடன் உள்ளார். விஜயின் கரூர் கூட்டத்திற்கு ரசிகர்கள் தமிழ்நாட்டு அனைத்து மாவட்டத்திலிருந்தும் ஆட்களை வரவைத்ததால் தான் கூட்டம் எக்குதப்பாக
அதிகமாகி இப்போ பிரச்னை, சிக்கல். எந்த விஷயத்திற்கும், முக்கியமாக அரசியலுக்கு இந்த காலகட்டத்தில் முழு அளவு"ப்ளானிங்"" தேவைபடுகிறது.
மற்ற திராவிட கட்சிகளில் பெற முடியாத பதவிகளை பெற உங்களுடன் சேருபவர்கள் செயல்திறம் அற்றதால் அவர்களால் புறக்கணிக்கப்பட்ட இரண்டாவது மூன்றாவது கட்ட தலைவர்கள். ஜாக்கிரதை விஜய் 0
0
Reply
Mecca Shivan - chennai,இந்தியா
15 ஜன,2026 - 17:23 Report Abuse
சான்றிதழ் கொடுப்பதற்கு முன் ஆட்சேபம் தெரிவித்த அந்த ஆறாவது நபர் யார் ? அவரை மிரட்டியது யார் ? இவ்வளவு முயற்சி செய்தும் பராசக்தி காணாமல் போனது யாருடைய கெட்ட நேரம் ? 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
15 ஜன,2026 - 15:27 Report Abuse
இது நாட்டுக்கு ரொம்ப தேவையான அத்தியாவசியமான விஷயம். 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
15 ஜன,2026 - 14:09 Report Abuse
நடிகரே உனக்கு எதுக்கு கட்சி தேவையா இதெல்லாம்? உன் கட்சியிலே இருக்கிற எல்லோருமே useless. இவுனங்களை நம்பி நீ எதுக்குப்பா கட்சி நடத்த வந்தே? வந்ததும் ஏகப்பட்ட அப்பாவி மக்களை காவு கொடுத்துட்டே பேசாம திரும்பி வெள்ளி திரைக்கே போயிடூ. அங்கே நட்சத்திரமாய் மின்னலாம்.அங்கேயிருந்தே மக்களுக்கு சேவை செய்யலாம். அரசியல் ஒரு சாக்கடை யாரோ சொன்னாங்க இல்ல நிஜம். லாட்டரி எல்லாம் நம்பி காலை வைக்காதே 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
15 ஜன,2026 - 13:52 Report Abuse
பாவம் எலிக்கு பயந்து புலிக்கு வாழ்க்கை போட்டுவிட்டார், தயாரிப்பாளர் தலையில் துண்டு அப்பவும் வாயை திறக்க மாட்டார் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
15 ஜன,2026 - 13:50 Report Abuse
படத்திற்கு சென்சார் செர்டிபிகேட் வாங்காமல் நல்ல அரசியல் விளம்பரம் மற்றும் உலகம் முழுவதும் மார்க்கெட்டிங் ஒரு பைசா செலவில்லாமல் கோர்ட்டு கேசு மூலம் நடந்து உள்ளது.
இன்னொரு பக்கம் வேறு படத்திற்கு சென்சார் செர்டிபிகேட், அவர்கள் பொங்கல் விழாவில் டெல்லியில் பங்கேற்பு, அந்த படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு என்பதை பார்க்கும் போது, வியாபாரம் அரசியலை கடந்து இரண்டு பக்கமும் வெற்றி நடை போடுவது நல்ல தெரிகிறது. 0
0
Reply
மேலும் 16 கருத்துக்கள்...
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
Advertisement
Advertisement