மஹாராஷ்டிரா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; அடையாள மை அழிவதாக உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
மும்பை:மும்பை மஹாராஷ்டிரா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாகவும், அடையாள மை அழிவதாகவும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
மஹாராஷ்டிராவில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. மும்பை உள்ளிட்ட மாநகராட்சிகளை கைப்பற்ற முக்கிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தலில் ஓட்டளிக்க வந்த முன்னாள் முதல்வரும் சிவசேனா பிரிவு தலைவருமான உத்தவ் தாக்கரே கூறியதாவது:
பல்வேறு பகுதிகளில் இருந்தும் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான பெயர்கள் விடுபட்டுள்ளன.
ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக வைக்கப்படும் மை முற்றிலும் அழிந்து போவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது?
அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பேராசை அவர்களை இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. இதை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்துவோம். இப்படி முறைகேடு செய்வதற்காக தான் அவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கொண்டு வருகின்றனர். இது ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமம்.
இவ்வாறு தாக்கரே கூறினார்.
@block_B@
மஹாராஷ்டிராவில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில்,98 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் தானே மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து தனது ஓட்டை பதிவு செய்தார். அவர்,தானே நகரில் உள்ள தெம்பி நாக்காவில் இருக்கும் பர்மார் ஹவுஸைச் சேர்ந்தவரும், திரைப்பட நடிகர் புஷ்கர் ஷ்ரோத்ரியின் கொள்ளுப் பாட்டியுமான லீலா ஷ்ரோத்ரி, பி.ஜே. உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஓட்டைச் செலுத்தியபோது, அவரது தளராத உற்சாகத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.block_B
விசாரணை நடத்துவோம்
மகாராஷ்டிரா தேர்தல் ஆணைய தலைவர் தினேஷ் வாக்மரே கூறுகையில், ''அடையாள மை, இந்திய தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படுவது. அது அழிய வாய்ப்பில்லை. அதை யாராவது அழிக்க முயற்சித்தால், வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.
முன் ஜாமீனுக்கு விண்ணப்பம்
சமர்ப்பித்து விட்டார்.
தோல்வியை ஒப்பு கொண்டு விட்டார்மேலும்
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்
-
77வது குடியரசு தின கொண்டாட்டம்: ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பங்கேற்பு
-
சத்தீஸ்கரில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; இன்று நக்சலைட்டுகள் 52 பேர் சரண்
-
கோவா முன்னாள் முதல்வரின் நிலத்தில் உள்ள ஹோட்டலுக்கு வருவாய்த்துறை சீல்!
-
78 வது ராணுவ தினம்: ராஜஸ்தானில் அணிவகுப்பு நிகழ்ச்சி கொண்டாட்டம்
-
ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள்; மீட்டு வர மத்திய அரசு தீவிரம்