78 வது ராணுவ தினம்: ராஜஸ்தானில் அணிவகுப்பு நிகழ்ச்சி கொண்டாட்டம்
ஜெய்ப்பூர்:78-வது இந்திய ராணுவ தினம் இன்று (ஜனவரி 15)ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ம் தேதி, பீல்டு மார்ஷல் கே.எம். கரியப்பா இந்திய ராணுவத்தின் முதல் இந்தியத் தளபதியாகப் பொறுப்பேற்ற நாளைக் குறிக்கும் வகையில் ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, டில்லிக்கு வெளியே ராணுவ தின அணிவகுப்பை நடத்தும் வழக்கத்தின்படி,78 வது இந்திய ராணுவம் தினம், இந்த ஆண்டு ராஜஸ்தானின் ஜெய்சால்மர் ராணுவ நிலையத்தில் நடைபெற்றது.
ராணுவ அணிவகுப்பில்ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் ராணுவத்தின் நவீன போர் டாங்கிகள், ஏவுகணைகள் மற்றும் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்திய ராணுவத்தின் வலிமையையும், நவீன தொழில்நுட்பங்களையும் பறைசாற்றும் விதமாக இந்த விழா அமைந்தது. முன்னதாக, ராணுவத் தளபதி போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு போர் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்