அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்

3


மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி மதுரை வலையங்குளத்தை சேர்ந்த பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவனியாபுரம் கார்த்தி 17 காளைகளை அடக்கி 2வது இடமும், அவனியாபுரம் ரஞ்சித் 16 காளைகளை அடக்கி 3 வது இடமும் பிடித்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. 12 சுற்றுகள் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக அளிக்கப்பட்டது. 2வது இடம் பிடித்த கார்த்திக்கு இரு சக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 60 பேருக்கு காயம் ஏற்பட்டது. தைத்திருநாளை முன்னிட்டு கோலாகலமாக தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், திமிறி வரும் காளையை மாடு பிடிவீரர்கள் தீரத்துடன் பாய்ந்து பிடித்தனர்.

முன்பதிவு
ஜல்லிக்கட்டில் பங்கேற்க 3,090 காளைகளும், 1,849 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தகுதிவாய்ந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டது.
மதுரை கலெக்டர் முன்னிலையில் வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு, அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் துவங்கி வைத்தனர். பின்னர், கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதன்பிறகு, ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டது. 12 சுற்றுகளின் முடிவில், 937 காளைகள் களம் கண்டன. இதன் முடிவில் பாலமுருகன் அதிக காளைகளை அடக்கி வெற்றி பெற்றார்.சிறந்த காளையாக தேர்வான விருமான்டி பிரதர்ஸ்க்கு டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது.

Advertisement