சத்தீஸ்கரில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; இன்று நக்சலைட்டுகள் 52 பேர் சரண்

2

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 15) நக்சலைட்டுகள் 52 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு போலீசாரிடம் சரண் அடைந்தனர்.


சத்தீஸ்கரின் தண்டேவாடா, சுக்மா மாவட்டங்களில் செயல்பட்டு வந்த நக்சல்களை ஒழிக்கும் பணியில், மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் நக்சலைட்டுகள் சரண் அடையும் நிகழ்வு நடந்து வருகிறது.


இந்நிலையில், இன்று (ஜனவரி 15) பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 52 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்களில் 49 பேருக்கு ரூ.1.41 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.


ஜனவரி 8ல், தண்டேவாடா மாவட்டத்தில் 63 நக்சல்கள் சரணடைந்தனர். இதேபோல் சுக்மா மாவட்டத்தில் ஜன., 7ல், 26 நக்சல்கள் சரணடைந்தனர். நேற்று (ஜனவரி 14) சுக்மா மாவட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த நக்சல்கள் 29 பேர், நேற்று போலீசில் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement