77வது குடியரசு தின கொண்டாட்டம்: ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பங்கேற்பு

2


புதுடில்லி: நாட்டின் 77வது குடியரசு தின கொண்டாட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு முக்கியத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
டில்லியில் வரும் ஜனவரி 26 அன்று நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், இவர்கள் இருவரும் ஜனவரி 25 முதல் 27 வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கின்றனர்.
குடியரசு தின அணிவகுப்பைத் தொடர்ந்து, ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள 16-வது இந்தியா--ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிற்கு இவர்கள் இருவரும் தலைமை வகிக்கின்றனர்.
தங்களது பயணத்தின் போது ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்திப்பதோடு, பிரதமர் மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தைகளையும் நடத்துகின்றனர்.


இந்தப் பயணத்தின் போது நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் இந்தியா--ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தலைவர்கள் இருவர் ஒரே நேரத்தில் குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Advertisement