செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் தேக்கம்;உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் முறையீடு
-டில்லி சிறப்பு நிருபர்-
'செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், பல சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி வருகின்றனர்' என, மனுதாரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட வேலைகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்தார் என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செந்தில் பாலாஜியை, கடந்த 2023, ஜூன் 14ல் கைது செய்தது.
கிட்டத்தட்ட 15 மாதங்கள், சிறை தண்டனை அனுபவித்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் அளித்தது. சிறையில் இருந்து வெளியே வந்த அடுத்தநாளே, அவர் அமைச்சராக பொறுப்பேற்றார்.
இதற்கு எதிராக சிலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஜாமினில் வெளியே வந்த ஒருவர், உடனே அமைச்சராக பொறுப்பேற்றால், அவருக்கு எதிரான வழக்கு எப்படி நேர்மையாக நடக்கும்? அவருக்கு எதிராக, அச்சமின்றி யார் சாட்சி சொல்ல வருவர்?' என, கேள்வி எழுப்பியதோடு, 'செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என்றால், அவருடைய ஜாமினை ரத்து செய்ய நேரிடும்' என்றும் எச்சரித்தனர். இதையடுத்து, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் ஒய்.பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம்:
இந்த வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞரை மாற்ற வேண்டும்; புதிதாக ஒருவரை நியமிக்க, பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மனுதாரர் என்ற முறையில், நாங்களும் சில பெயர்களை கொடுத்திருக்கிறோம்.
அதோடு, இந்த வழக்கில் காலதாமதம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தேவையில்லாமல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரையும் விசாரித்து, பின் வழக்கு எப்போது முடியும் என்பதே தெரியவில்லை.இந்த வழக்கு விசாரணையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. பல சாட்சிகள், பிறழ் சாட்சிகளாக மாறி வருகின்றனர். குற்றத்துக்கு உடந்தையாக இருந்தோரை, முதலில் விசாரித்து முடிக்க வேண்டும்; அப்போது தான், வழக்கில் விரைந்து ஒரு தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
'விசாரணையை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்' என, அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதை ஏற்று, விசாரணையை, பிப்ரவரி முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
Just like non-bailable warrants, certain serious offences should be booked under non-appealable offences.
குற்றமிழைத்தவர்கள் பேரன் பேத்தி காலங்கள் வரையிலும் கொள்ளையடித்த சொத்துக்களை வாரிசுகள் அனுபவிக்க உதவும் வரையிலும் இழுத்தடிப்பது நியாயமா? அதற்குள் அவரே இருக்கமாட்டார்.
2026 ல் மக்கள் ஹிந்து மக்கள் ஒற்றுமையாக தீய சக்திக்கு எதிராக வாக்களித்தால் தான் கொஞ்சமாவது லஞ்சம் குறையும். கவர்னருக்கு காலக்கெடு விதிக்கும் நீதி துறை ஏன் வழக்குகளுக்கு கால வரம்பு நிர்ணயிக்க கூடாது
தொட்டுப் பாரு, கை வெச்சு பாரு ன்னு இதனாலதான் சவால் உடுறாய்ங்களோ ????
ஒரு கேடி வேலை வாங்கிக்கொடுக்க பணம் வாங்கியது நிஜமோ இல்லையோ பணத்தை திரும்ப கொடுத்து அதை தானே ஊழல் செய்ததை ஒப்புக்கொண்டபின்னும் குற்றத்தை நிரூபிக்க முயல்வது சுத்த அயோக்கியத்தனம். குற்றவாளியை வெளியே விட்டு விசாரிப்பது அதைவிட கோமாளித்தனம்.
இந்த வழக்கு பிரபல செய்தித்தாளில் வரும் சிந்துபாத் கதை மாதிரியே நீடிக்கும் என்பதில் ஐயமில்லை
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? என்று சொல்வார்கள். அதுபோல் அந்த ஐந்து கட்சி அமாவாசை ஒரு மிகப்பெரிய ஊழல் பேர்வழி என்று தெரிந்தும், அவரை வெளியில் விட்டால் சாட்சிகள், பிறழ் சாட்சிகளாக மாற்றப்படமாட்டார்களா? அந்த சாட்சிகளுக்கும் உயிர்ப்பயம் இருக்கத்தானே செய்யும். டேக் டைவேர்ஷன் ஆபரேஷனையே வெற்றிகரமாக முடித்தவருக்கு சாட்சிகளை தனக்கு சாதகமாக திருப்புவதா கஷ்டம்? இதில் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற வெற்று வீரவசனம்.
செந்தில் பாலாஜி மீது திமுக தொடர்ந்த வழக்கை, ஏன் திமுக வாபஸ் வாங்கவில்லை?
செந்தில் பாலாஜி உத்தமர் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், வழக்கை வாபஸ் செய்ய அறிவுறுத்த வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
what kind of legal system, every citizen in TN knows that he is culprit but still no judgement
இந்த வழக்கு விசாரனை முடிவதற்கு முன்