தி.மு.க., சார்பில் விளையாட்டு போட்டி

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில், தி.மு.க., சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மனோகர் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், மாவட்ட பிரதிநிதி சங்கர், மாவட்ட துணை செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் கதிரவன் பரிசு வழங்கினார். விழாவில், விளையாட்டு அணி சதீஷ்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அப்பு சத்தியநாராயணன், மருத்துவரணி துணை அமைப்பாளர் ஆனந்த், முன்னாள் சேர்மன் கருணாநிதி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் நல்லதம்பி, ஒன்றிய துணை செயலாளர் சதா இளவரசு, கவுன்சிலர்கள் ஆனந்தன், கணேசமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி காதர் மஸ்தான், சுபாகர், மாணவரணி பார்த்திபன், செல்வா, இளைஞரணி நடராஜ், அரவிந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement