கள்ளக்குறிச்சியில் பொங்கல் கலை விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலை பண்பாட்டு துறை சார்பில் பொங்கல் கலை விழா நடந்தது.

பொங்கல் பண்டிகையொட்டி, சென்னையில் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நடத்துவதுபோல் அனைத்து மாவட்டங்க ளிலும் பொங்கல் கலை விழா நடத்த அரசு உத்தரவிட்டது.

அதன்படி கள்ளக்குறிச்சி மந்தைவெளி கலையரங்கத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 2 நாள் நடக்கும் பொங்கல் கலை விழா நேற்று முன்தினம் துவங்கிய து. விழா ஒருங்கிணைப்பாளர் கவுதம் வரவேற்றார். கலெக்டர் பிரசாந்த் பங்கேற்று பறை இசை அடித்து கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

முதல் நாளில் ஜவகர் சிறுவர் மன்றம் மாணவர்களின் நாட்டுப்புற கலை, சிலம்பம், பரதநாட்டியம், பால சரஸ்வதி கலைக் கூடத்தின் பரதநாட்டியம், முத்துமாரியம்மன் கரகாட்டக் கலைக் குழுவின் நையாண்டி மேளம், கரகாட்டம், பால்ராஜ் மகாலட்சுமி கரகாட்டக் கலைக்குழுவின் நையாண்டி மேளம், கரகாட்டம், முத்து தப்பாட்டக் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சி நடந்தது.

இரண்டாம் நாளான நேற்று தேவி கலாலய நடனப்பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம், மாத்துார் மாரியாபிள்ளை கலைக்குழுவினரின் கரகாட்டம், விஜய லிங்கம் கலைக்குழுவின் கரகாட்டம், பரிகம் பாலகிருஷ்ணன் இளம் சிங்கம் இசைக்குழு வின் நாட்டுப்புற நடன நிகழ்ச்சி நடந்தது.

Advertisement