விற்பனை ஆகாததால் குப்பையில் கொட்டிய பூக்கள்

தேனி: தேனி பூ மார்க்கெட்டில் செவ்வந்தி, சென்டுமல்லி பூக்கள் விற்பனையாகாததால் குப்பையில் கொட்டப்பட்டன.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, தேனி, கம்பம், சின்னமனுார் உள்ளிட்ட வட்டாரங்களில் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. சாகுபடியாகும் பூக்கள் தேனி, ஆண்டிபட்டி, சின்னமனுார் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக பொங்கல் பண்டிகை, வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆனாலும், சென்டு மல்லி ரூ.50க்கும், செவ்வந்தி ரூ. 120க்கும் விற்பனையானது. இந்த இருபூக்களும் மாலை கட்டுவதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வியாபாரிகள் கூறுகையில், 'தேனி பூ மார்க்கெட்டில் சென்டு பூ, செவ்வந்தி பூக்கள் வரத்து அதிகம் இருந்தது. ஆனால், இரு வகை பூக்கள் விற்பனை மந்தமாக இருந்தது. விற்பனையாகத பூக்களை குப்பையில் கொட்டியதாக,'கூறினர்.

Advertisement