பள்ளி மாணவருக்கு இயற்கை முகாம்

கோவை: மாவட்ட பள்ளிக்கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இரண்டு நாள் உண்டு உறைவிட இயற்கை முகாமினை நடத்தின.

இம்முகாமில், மாவட்டத்திலுள்ள 10 அரசுப் பள்ளிகளிலிருந்து, சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய 8ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை 25 மாணவர்கள் மற்றும் 25 மாணவிகள் என 50 பேர் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றனர்.

நீலகிரி உயிர்க்கோள இயற்கை பூங்கா மற்றும் சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் இம்முகாம் நடைபெற்றது.

Advertisement