உழவர் சந்தையில் பொங்கல் வைத்த விவசாயிகள்

சேலம்: சேலம், சூரமங்கலம் உழவர் சந்தையில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் சுஜாதா தலைமை வகித்தார். அதில் விவசாயிகள், மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஏற்-பாடுகளை உதவி வேளாண் அலுவலர் சேட்டு உள்ளிட்ட அலுவ-லர்கள் செய்திருந்தனர். மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள, 13 உழவர் சந்தைகளிலும் காய்கறி விற்பனை களைகட்டியது. அதன்-படி, 354.88 டன் காய்கறி மூலம், 1.52 கோடி ரூபாய் விற்பனை நடந்தது.


மாநகர போலீசார்சேலம் மாநகர போலீஸ் துறை சார்பில், அன்னதானப்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கூரை வீடு, மாட்டு வண்டி, சேவல், ஆடு என, கிராம சாயலை உருவாக்கி இருந்-தனர். கமிஷனர் அனில்குமார் கிரி உள்ளிட்ட குடும்பத்தினர் தலைமை வகித்து, பொங்கல் வைத்து வணங்கினர். தொடர்ந்து போலீசாரின் குழந்தைகள் நடனம், கரகம், உரியடி நிகழ்ச்சிகள் நடந்தன. கலைநிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, கமிஷனர் பரிசு வழங்கினார். துணை கமிஷனர்கள் சிவராமன், கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார், அவர்க-ளது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
மாடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் விற்பனை
இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, உழவுக்கும், பால் உற்-பத்திக்கும் உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்து விவசா-யிகள் கொண்டாடுவர். இதனால் சேலம் குரங்குச்சாவடி, கொண்-டலாம்பட்டி, அம்மாபேட்டை, வீராணம் உள்பட பல்வேறு பகுதி-களில், மாடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன. மாட்டுக்கு தேவையான வண்ண வண்ண கயிறுகள், மூக்கணாங்கயிறு, சங்கு, மணி, கலர்பொடி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. மூக்கணாங்கயிறு, 50 முதல், 1,000 ரூபாய் வரையும், மாட்டுக்கு கட்டும் மணி, 10 முதல், 250 ரூபாய் வரை விற்பனையானது. தவிர சங்கு உள்-ளிட்ட பல்வேறு வகை பொருட்களும், மாடுகள் அலங்கரிக்க, விவசாயிகள் வாங்கி சென்றனர்.
அதேபோல் இடைப்பாடி அருகே வெண்டனுாரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கயிறு திரிக்கும் தொழிலை செய்கின்-றனர். அங்கு தயாரான கயிறுகள் கடந்த, 3 நாட்களாக கொங்கணா-புரம், இடைப்பாடி, சித்துார், பூலாம்பட்டி பகுதிகளில், மக்கள் கூடும் சாலைகளில் புதிதாக கடைகள் போட்டு விற்பனை நடந்து வருகிறது.
இதுகுறித்து வெண்டனுாரை சேர்ந்த சண்முகம் கூறுகையில், ''கயிறு திரிப்பது தான் தொழில். மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு, அலங்கார சலங்கை, கால், கழுத்து சலங்கைகளை, 3 மாதங்களாக தயாரிப்போம். அவற்றை மாட்டுப்பொங்கலுக்கு விற்கிறோம்,'' என்றார்.
உப்பு வாங்கிய மக்கள்
தை முதல் நாளில் சமையல் உப்பு, மஞ்சள், குங்குமம் ஆகிய-வற்றை மளிகை கடைகளில் வாங்கி, கோவில்களில் வைத்து பூஜை செய்த பின், அவற்றை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் நேற்று, இடைப்பாடியில் உள்ள மளிகை கடைகளில் உப்பு உள்ளிட்டவற்றை ஏராள-மானோர் வாங்கினர். சாலையோரம் வைக்கப்பட்ட உப்பு கடைக-ளிலும் ஏராளமானோர் வாங்கினர்.

Advertisement