விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்
மும்பை: மும்பையில் இருந்து தாய்லாந்து செல்லும், 'இண்டிகோ' விமானத்தின் பைலட், தன் பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி விமானத்தை இயக்க மறுத்ததால், விமான ஊழியர்களுடன் பயணியர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மஹாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் இருந்து, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் கராபி தீவுக்கு, நேற்று முன்தினம் அதிகாலை 4:05 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட இருந்தது. இந்நிலையில், தன் பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி விமானி அந்த விமானத்தை இயக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பயணியர், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட களேபரத்துக்கு பின் விமானம் புறப்பட்டது. காலை 1:00 மணிக்கு கராபி சென்றடைய வேண்டிய விமானம், மதியம் 1:00 மணிக்கு தரையிறங்கியது.
இது குறித்து இண்டிகோ நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
மும்பைக்கு வரவேண்டிய விமானம் தாமதமாக வந்தது, வான்வழி போக்குவரத்து நெரிசல், பணியாளர்களின் பணி நேரம் முடிந்தது போன்ற காரணங்களால் விமானம் தாமதமானது. விமானத்தில் இரு பயணியர் முறைகேடாக நடந்து கொண்டனர். அவர்களை பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்ததாலும் விமானம் தாமதமானது. பயணியர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதே எங்கள் நோக்கம். பயணியருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் தொடர்ந்தால் 25,850 வரை சென்று திரும்பலாம்
-
ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4 லட்சத்தை எட்ட வாய்ப்பு
-
மாபெரும் மாற்றத்தில் இந்திய நுகர்வு முறை: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
-
அதிகாரிகள் மிரட்டலால் 'பார்'களில் ஹிந்தி அழிப்பு
-
பட்டியலிடப்படாத நிறுவனங்கள் கட்டுப்படுத்த செபி ஆலோசனை
-
மியூச்சுவல் பண்டு கட்டணங்கள் குறைகிறது