போலீஸ்காரர் ஜீப் மோதி விபத்து தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் பலி
அயோத்தியாப்பட்டணம்: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், டி. பெருமாபா-ளையத்தை சேர்ந்தவர் பாளையாகவுண்டர், 68. முன்னாள் சர்-வேயர் மற்றும் தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய முன்னாள் கவுன்சி-லரான இவர், நேற்று காலை, 11:30 மணிக்கு, மின்னாம்பள்ளி ஊருக்குள் இருந்து, அயோத்தியாப்பட்டணம் நோக்கி, ஹெல்மெட் அணியாமல் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அதேநேரம் வாழப்பாடி, சின்னம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த, நீலகிரி மாவட்டம் குன்னுாரில், 2ம் நிலை போலீஸ்கார-ராக பணிபுரியும் கிருபாகரன், 32, பொலிரோ ஜீப் ஓட்டிவந்தார். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற மின்னாம்பள்ளியை சேர்ந்த பெருமாள், 65, மீது மோதாமல் இருக்க, கிருபாகரன் முயன்றார்.அதில் கட்டுப்பாட்டை இழந்து ஜீப், பெருமாள் மீதே மோதி, எதிரே மொபட்டில் வந்த, பாளையாகவுண்டர் மீதும் மோதியது. இருவரும் படுகாயம் அடைந்தனர். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாளையாகவுண்டர் உயிரி-ழந்தார். பெருமாள், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டார். காரிப்பட்டி போலீசார், கிருபாகரனிடம் விசாரிக்கின்-றனர்.
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!