முனியப்பன் கோவிலில் 140ம் ஆண்டு திருவிழா

சேலம்: சேலம், அஸ்தம்பட்டி ரவுண்டானாவில், மத்திய சிறை போலீசார் குடியிருப்பு வளாகத்தில் உள்ள, சிறை முனிப்பன் கோவிலில், 140ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றம், கண் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு, முனியப்ப சுவாமி பதியில் இருந்து, பால்-குடம், சக்தி அழைத்தல் ஊர்வலம், மேள தாளம் முழங்க நடந்-தது.


தொடர்ந்து முனியப்பனுக்கு பால் அபிேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் ஆண்டு திருவிழா பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள், ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து முனீஸ்வரரை வழிபட்டனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்-டது. இரவு சத்தாபரண ஊர்வலம் நடந்தது.

Advertisement