ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம்
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் நடந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று இங்கு அனைத்து விதமான பூஜைகளும் விழாக்களும் நடந்து வருகிறது.
மகர ஜோதியை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம் நடந்தது. காலை 5:30 மணிக்கு அஷ்டாபிஷேகம் மற்றும் பல்வேறு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
வல்லபை ஐயப்பன் சன்னிதானம் முன்புறம் நேற்று மாலை 6:00 முதல் 6:40 மணிக்குள் சிறப்பு பூஜை மற்றும் பக்தர்கள் அனைவரும் கண்டு தரிசித்து செல்லும் வகையில் மகரஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்து இருந்தார். ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் மகரஜோதி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பல்கலையின் ரூ.140 கோடி சொத்துகள் முடக்கம்
-
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்தது
-
நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்
-
விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்
-
பார்லி., விசாரணை குழுவுக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி பணமூட்டை விவகாரம்:
-
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ. கூட்டணி அபாரம்! : தாக்கரே ஆதிக்கம் முடிந்தது
Advertisement
Advertisement