ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் விபத்தை தடுக்க தீத்தடுப்பு கோடுகள் கோடை துவங்கும் முன் அமைப்பது அவசியம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் புலிகள் காப்பக வனப்பகுதியில் குளிரின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் ஏற்பட துவங்கியுள்ளதால் கோடை வெயிலுக்கு முன்பே தீத்தெடுப்பு கோடுகளை அமைப்பது அவசியமாகிறது.

480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள், மான்கள், புலிகள், பாம்புகள், சாம்பல் நிற அணில்கள் உட்பட பல அரிய வகை வன விலங்குகளும், பறவைகளும் வசித்து வருகின்றன.

இந்நிலையில் டிசம்பர் மாதம் வரை அடிக்கடி பெய்த மழையினால் மலைப்பகுதி பசுமையாக காணப்பட்டது. தற்போது குளிரின் தாக்கம் குறைய துவங்கி வெயிலின் தாக்கம் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு போல் வனப்பகுதியில் அடிக்கடி ஏற்பட்ட தீ விபத்துகளை தடுக்கும் வகையில் தீ தடுப்பு கோடுகளை, போதிய அகலத்துடனும், நீளத்துடனும் அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் கீத் தடுப்பு கோடுகள் அமைக்கும் முதற்கட்ட பணியில் விரைவில் ஈடுபட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement