போலீஸ் செய்திகள்

வாலிபர் மீது போக்சோ

சாத்துார், ஜன. 16-

ஏழாயிரம் பண்ணை மார்க்கநாதபுரம் பாண்டீஸ்வரன், 20 . பட்டாசு ஆலை தொழிலாளி இவருடன் பணி புரிந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாக்கினார். வெம்பக்கோட்டை ஊரக நல அலுவலர் மகாலட்சுமி புகாரில் சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சிறுவன் தற்கொலை

சாத்துார், ஜன. 16-

சாத்துார் மீனாட்சிபுரம் நியூ காலனியை சேர்ந்தவர் ராஜவேல்முருகன்,45. இவர் மகன் பத்மேஷ், 12. நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு வீட்டில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

மது பாட்டில்கள் பறிமுதல்

சாத்துார், ஜன. 16-

சாத்துார் இ.டி. ரெட்டிய பட்டி யை சேர்ந்தவர் அய்யலுராஜ், 47. மடத்துப்பட்டி பஸ்ஸ்டாப்பில் அரசு அனுமதி இன்றி மதுபாட்டில் விற்பனை செய்தார் ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து 180 மி.லி., அளவு கொண்ட 26 மது பாட்டில்களையும் ரொக்கம் ரூ 4060 பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement