எல்.கே. துளசிராம் பிறந்த தினவிழா

மதுரை: மதுரை சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுதலைப் போராட்ட வீரரான எல்.கே. துளசிராம் 156வது பிறந்ததின விழா நடந்தது.

அவ்ராம் அமி அறக்கட்டளை நிறுவனர் தேவராஜ் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.

துளசிராமின் பன்முக ஆளுமை எனும் தலைப்பில் காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசுகையில்,'' மதுரை நகராட்சியின் தலைவராக இரண்டு முறை இருந்தார். ஜி.டி. நாயுடு உடன் இணைந்து தென் தமிழகத்தின் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர். வழக்கறிஞர், சிறந்த பேச்சாளர், சமூக சிந்தனையாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர்'' என்றார்.

கல்வியில் சிறந்த மாணவன் விஷ்ணுவரதனுக்கு உதவித்தொகை ரூ.4000 வழங்கப்பட்டது. எழுத்தாளர் சாமி, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரங்கன், தேசிய ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தலைவர் ஞானேஸ்வரன், ஓய்வு பெற்ற வணிகவரி உதவி கமிஷனர் கோபால், சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் தினேஷ் கலந்து கொண்டனர்.

உறுப்பினர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement