பொங்கல் விழா கொண்டாட்டம்
மதுரை: மதுரையில் பள்ளி, கல்லுாரிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சவுராஷ்டிரா கல்லுாரியில் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார். உள்தர உறுதி கலத்தலைவர் கலைவாணி, துணைத் தலைவர்கள் ராஜசேகரன், விஷ்ணு பிரியா, தேர்வு கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் துரைசாமி, டீன் கவிதா, வேலைவாய்ப்பு அதிகாரி ஜெயந்தி, அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். முதல்வர் கிருஷ்ணாஸ்ரீ முன்னிலை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விளாச்சேரியில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் நேத்ராவதி வலி நிவாரண மையத்தில் சிறப்பு விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதி வடமலை பங்கேற்றார். அறங்காவலர் டாக்டர் பாலகுருசாமி வரவேற்றார். வழக்கறிஞர் அன்பழகன், அட்சய பாத்திரம் அறக்கட்டளை தலைவர் நெல்லை பாலு பங்கேற்றனர். புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியின் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
பொய்கரைப்பட்டி மூணுாரில் மூன்றாம் பார்வை அறக்கட்டளையின் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் நிறுவனர் பழனியப்பனின் நினைவு தினமும், பொங்கல் விழாவும் நடந்தது. மாணவர் கார்த்திக் வரவேற்றார். கவிஞர் இரா.ரவி, தொழிலதிபர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விடுதி இயக்குநர் கோபி, பாஸ்கர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கோவில்பாப்பாகுடி ஏ.ஆர்.சிட்டியில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சோனை தலைமை வகித்தார். பொறியாளர் அரிசங்கர் முன்னிலை வகித்தார். கோலப்போட்டிக்கு மங்கையர்கரசி மகளிர் கல்லுாரி முதல்வர் உமா, தமிழ்த் துறை பேராசிரியை அற்புத வள்ளி நடுவர்களாக செயல்பட்டனர். குணசுந்தரி, ராஜேஸ்வரி, பிரதீபா, மீனாட்சி முதல் மூன்று பரிசுகளை பெற்றனர்.
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!