தி.மு.க., சார்பில் விளையாட்டு போட்டி

சிதம்பரம்: கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட அளவில் காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மைதானம், சிதம்பரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகிய இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.

போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு வழிா காட்டுமன்னர்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் நடந்தது.

தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை வழங்கினார்.

Advertisement