அதிபர் டிரம்பிடம் நோபல் பரிசை கொடுத்துவிட்டேன்; வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ அறிவிப்பு

32


வாஷிங்டன்: வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனது அமைதிக்கான நோபல் பரிசுப் பதக்கத்தை அதிபர் டிரம்பிடம் வழங்கியதாகக் கூறினார்.


அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்பட்டு, நான் எட்டு போர்களை நிறுத்திவிட்டேன் என்று அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்தாலும், 2025ம் ஆண்டுக்கான பரிசு அவருக்கு வழங்கப்படவில்லை. இருந்தாலும் அமைதிக்கான நோபல் பரிசு குறித்து டிரம்ப் தொடர்ந்து புலம்பி வருகிறார்.


இதற்கிடையே, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ, 'எனக்கு கிடைத்த நோபல் பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.


மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்தது. நோபல் பரிசு ஒருவருக்கு வழங்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அது அவருடையதுதான் என நோபல் அமைப்பு திட்டவட்டமாக கூறியிருந்தது.


இந்நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தார். அவருக்கு தனக்கு வழங்கப்பட்டிருந்த அமைதிக்கான நோபல் பரிசை வழங்கினார்.

பிறகு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், டிரம்பிற்கு தனது பரிசை வழங்கியதாக மச்சாடோ தெரிவித்தார். மேலும், அவர் இது நமது சுதந்திரத்திற்கான அவரது தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும். நாங்கள் அதிபர் டிரம்பை நம்பலாம்" என தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை அறிவிப்பு



இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிபர் டிரம்ப் வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவை ஓவல் அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவர் அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை அங்கீகாரமாகவும், கவுரவமாகவும் வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

@block_Y@

நன்றி மரியா!

இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவைச் சந்தித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். அவர் பலவற்றைக் கடந்து வந்த ஒரு அற்புதமான பெண்மணி. நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார். block_Y

Advertisement