தவெக சார்பில் சட்டசபை தேர்தல் பிரசாரம்; குழு அமைத்தார் விஜய்

5

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான பிரசார பணிகளை மேற்கொள்ள தவெகவில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.



தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகிறது. தேர்தல் பணிகளை விறுப்பாக செய்து வருகிறது. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, மறுபக்கம் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில், தேர்தல் அறிக்கை தயாரிக்க தவெக தலைவர் விஜய் குழு அமைத்து இருந்தார்.


தற்போது, சட்டசபை தேர்தலுக்கான பிரசார பணிகளை மேற்கொள்ள தவெகவில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து விஜய் அறிவித்தார். ஆனந்த் தலைமையிலான அந்தக் குழுவில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சை ரத்தினம் கரிகாலன், செரவு மைதின், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது 234 தொகுதிகளிலும் பிரசார கூட்டங்களை திட்டமிடவுள்ளது.

Advertisement