ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
புதுடில்லி: ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
மத்தியில் ஆளும் பாஜவின் கனவு திட்டங்களில் ஒன்று ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம். நம் நாட்டில் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், தொழில்முனைவோருக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட கட்டமைப்பை ஏற்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தற்போது 10 ஆண்டுகளை எட்டி விட்டது. ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் இந்தியாவின் பொருளாதார, புதுமைக் கண்டுபிடிப்புக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் நாடு முழுவதும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரிக்க இந்த திட்டம் வகை செய்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 2,00,000க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிலையில், இதனை சிறப்பிக்கும் விதமாக, டில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். அங்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்கள் தொழில்முனைவோர் பயணத்தின் அனுபவங்களை பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, ஸ்டார்ட் அப் இந்தியா திட்ட அமைப்பின் பிரதிநிதிகளுடன் பிரதமர் உரையாடவுள்ளார்.
மேலும்
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் தொடர்ந்தால் 25,850 வரை சென்று திரும்பலாம்
-
ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4 லட்சத்தை எட்ட வாய்ப்பு
-
மாபெரும் மாற்றத்தில் இந்திய நுகர்வு முறை: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
-
அதிகாரிகள் மிரட்டலால் 'பார்'களில் ஹிந்தி அழிப்பு
-
பட்டியலிடப்படாத நிறுவனங்கள் கட்டுப்படுத்த செபி ஆலோசனை
-
மியூச்சுவல் பண்டு கட்டணங்கள் குறைகிறது