தென் கொரியா முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை
சியோல்: ராணுவ அவசர நிலை அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் ஆதாரங்களை அழிக்க முயன்ற குற்றச்சாட்டில் தென் கொரியா முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் அதிபராக இருந்த யூன் சுக் இயோல் கடந்த 2024ம் ஆண்டு டிச.,3 ல் ராணுவ அவசர நிலையை அறிவித்தார். இதற்கு எதிராக பார்லிமென்டில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சில மணி நேரங்களில் அந்த உத்தரவை திரும்பப் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக பார்லிமென்டில் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதை அந்த நாட்டின் அரசியல்சாசன நீதிமன்றம்உறுதி செய்தது.இதையடுத்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதில், நீதி வழங்குவதற்கு தடையாக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் தனது உத்தரவில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அதிகாரிகள் அவரை கைது செய்ய முயன்ற போது தடையை ஏற்படுத்தியதாகவும், ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னர் அமைச்சரவையில் உள்ளவர்களுடன் விவாதிக்காமல், விதிமுறைகளை மீறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ராணுவ அவசர நிலை திரும்பப் பெறப்பட்ட பிறகு, அதற்கான தீர்மானத்தையும், பாதுகாப்பான ராணுவ மொபைல்போன்களில் இருந்து ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளது.
யூன் சுக் இயோல் மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.அதில், அவரது மனைவி மீதான ஊழல் குற்றச்சாட்டும் அடக்கம்.
இதுபோன்ற தண்டனைமுறைகள் இந்தியாவில் வரவேண்டும். பழைய ஊழல் பெருச்சாளிகள் பிடிபட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கவேண்டும்.மேலும்
-
நெடுஞ்சாலையில் விளம்பர பேனர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
-
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்
-
தொழிற்பள்ளி துவங்க விண்ணப்பம் வரவேற்பு
-
சாலை சந்திப்பில் வழிகாட்டி பலகை அமைக்க கோரிக்கை
-
இன்று இனிதாக (17.01.2026) திருவள்ளூர்
-
பொன்னேரி அரசு மருத்துவமனையில் சான்றிதழ் பெற மக்கள் அலைக்கழிப்பு