இந்திய ஓபன் பாட்மின்டன்: லக்சயா சென் ஏமாற்றம்
புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென் தோல்வியடைந்தார்.
டில்லியில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் லக்சயா சென், சீனதைபேயின் லின் சுன்-யி மோதினர். முதல் செட்டை 21-17 எனக் கைப்பற்றிய லக்சயா, இரண்டாவது செட்டை 13-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய லக்சயா 18-21 எனக் கோட்டைவிட்டார்.
ஒரு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த போட்டியில் லக்சயா சென் 21-17, 13-21, 18-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து வெளியேறினார். இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே சிந்து, சாத்விக்-சிராக், திரீசா-காயத்ரி, மாளவிகா, ஸ்ரீகாந்த், பிரனாய் உள்ளிட்டோர் தோல்வியடைந்து வெளியேறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் தொடர்ந்தால் 25,850 வரை சென்று திரும்பலாம்
-
ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4 லட்சத்தை எட்ட வாய்ப்பு
-
மாபெரும் மாற்றத்தில் இந்திய நுகர்வு முறை: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
-
அதிகாரிகள் மிரட்டலால் 'பார்'களில் ஹிந்தி அழிப்பு
-
பட்டியலிடப்படாத நிறுவனங்கள் கட்டுப்படுத்த செபி ஆலோசனை
-
மியூச்சுவல் பண்டு கட்டணங்கள் குறைகிறது
Advertisement
Advertisement