இந்திய கூட்டணியில் மாற்றம் வருமா: மூன்றாவது போட்டியில் எதிர்பார்ப்பு
இந்துார்: முக்கியமான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய பவுலிங் கூட்டணியில் மாற்றம் செய்யப்படலாம்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைய, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 'பைனல்' போன்ற மூன்றாவது போட்டி நாளை (ஜன.18) இந்துாரின் (ம.பி.,) ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் வெல்லும் அணி கோப்பை கைப்பற்றலாம்.
சுதாரிப்பாரா குல்தீப்: இந்திய அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நமது 'ஸ்பின்னர்'கள் ஏமாற்றினர். 'மிடில் ஓவர்களில்' குல்தீப் யாதவ் (10-0-82-1), ரவிந்திர ஜடேஜா (8-0-44-0) சரியான அளவில் பந்துவீசவில்லை. இதை பயன்படுத்திய டேரில் மிட்சல், வில் யங் 3வது விக்கெட்டுக்கு 162 ரன் சேர்த்தனர். இவர்களது 'புட்வொர்க்' சிறப்பாக இருந்தது. 'ஸ்வீப் ஷாட்' மூலம் எளிதாக ரன் எடுத்தனர். சதம் விளாசிய டேரில் மிட்சல், வெற்றிக்கு வித்திட்டார். தவிர, நியூசிலாந்து 'ஸ்பின்னர்'கள் மைக்கேல் பிரேஸ்வெல் (10-1-34-1), ஜேடன் லெனாக்ஸ் (10-0-42-1) கட்டுக்கோப்பாக பந்துவீசி இந்திய அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.
வருவாரா படோனி: நாளை போட்டி நடக்கும் ஹோல்கர் மைதானத்தின் பவுண்டரி அளவு குறைவு. ஆடுகளம் பேட்டர்களின் சொர்க்கபுரி. இதனால், பவுலர்கள் கொஞ்சம் தடுமாறினாலும், பந்துகள் சிக்சருக்கு பறக்கும். கடந்த போட்டியில் 82 ரன்னை வாரி வழங்கிய குல்தீப், இம்முறை 'ஸ்டம்ப்ஸ்'களை குறி வைத்து துல்லியமாக பந்துவீச வேண்டும். ராஜ்கோட் போட்டியில் 'ஸ்பின் ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் (விலா எலும்பு காயம்) இல்லாத குறையை உணர முடிந்தது. இவருக்கு பதிலாக இடம் பெற்ற நிதிஷ் குமார் ரெட்டி, 2 ஓவர் தான் வீசினார். ஹோல்கர் மைதான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 'ஆப்-ஸ்பின்னரான' ஆயுஷ் படோனிக்கு அறிமுக வாய்ப்பு அளிக்கலாம். ஆனால் ஒரு போட்டியின் அடிப்படையில் நிதிஷ் குமாரை நீக்கவிட்டு படோனியை சேர்ப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வேகப்பந்துவீச்சையும் பலப்படுத்த வேண்டும். பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை களமிறக்கலாம். அர்ஷ்தீப் பந்துவீசும் அளவு ஹோல்கர் மைதானத்திற்கு பொருத்தமானதாக இருக்கும். சரியான பவுலிங் கூட்டணியை கண்டறிந்தால், சுலப வெற்றி பெறலாம். கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மா, கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் அடங்கிய பேட்டிங் படையில் மாற்றம் செய்ய தேவையில்லை. இவர்களது ரன் வேட்டை தொடரும்பட்சத்தில், இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றலாம்.
ராசியான மைதானம்
இந்துார், ஹோல்கர் மைதானம் இந்திய அணிக்கு ராசியானது. இங்கு ஏற்கனவே நடந்த 7 ஒருநாள் போட்டிகளிலும் வென்றது. இங்கிலாந்து (2006, 2008), வெஸ்ட் இண்டீஸ் (2011), தென் ஆப்ரிக்கா (2015), ஆஸ்திரேலியா (2017, 2023), நியூசிலாந்து (2023) அணிகளை வீழ்த்தியது.
பயிற்சிக்கு 'நோ'
நியூசிலாந்து அணியினர் நேற்று இந்துார், ஹோல்கர் மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய வீரர்கள் பயிற்சியை தவிர்த்தனர்.
ஹர்பஜன் சிஙகிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.மேலும்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
-
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பிப்., 3 முதல் வேலைநிறுத்தம் 'ஆக்டோ ஜியோ' அறிவிப்பு
-
ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம்
-
கல்வி நிறுவனங்களில் சமத்துவ குழு ஜாதியை வளர்க்கும் யு.ஜி.சி., உத்தரவு