குற்றவாளிகளை பாதுகாக்கிறார்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குற்றவாளிகளை பாதுகாப்பதுடன், அவர்களுக்கு தலைமையேற்கும் நிலைக்கு சென்றுள்ளார். அரசியல் வாழ்வில் இருந்து அவரை விடுவிக்க, மக்கள் தயாராக உள்ளனர். இங்கு, நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

முக்தார் அப்பாஸ் நக்வி மூத்த தலைவர், பா.ஜ.,

தேச விரோத செயல்!



மஹா., மாநகராட்சி தேர்தலில், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் மை அழிவது சாதாரண தொழில்நுட்பக் கோளாறு அல்ல; இது திட்டமிட்ட சதி; ஓட்டுத் திருட்டு ஒரு தேச விரோதச் செயல். மக்கள், ஜனநாயகத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை தேர்தல் கமிஷன் தற்போது கே ள் விக்குறியாக்கி உள்ளது .


ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்

தோல்வியை ஒப்புக்கொள்கிறீர்களா?



தேர்தல் கமிஷனை தொடர்ந்து அவமதிப்பது, திரிப்பது, தவறான தகவல்களைப் பரப்புவது போன்ற செயல்களை ராகுல் சிறப்பாக மேற்கொள்கிறார். இப்போது, தாக்கரேக்களின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஓட்டு எண்ணிக்கை முடியும் முன் தோல்வியை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனரா?

ஷெசாத் பூனாவாலா செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

Advertisement