30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சோனலிகா' டிராக்டர்

புதுடில்லி : டிராக்டர் மற்றும் வேளாண் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான சோனலிகா, 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

அந்நிறுவனத்தின் அறிக் கையில் கூறிப்பட்டதாவது:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான ஹோஷியார்பூரில் 1996ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், உலக அளவில் 110 கோடி டிராக்டர்களை இதுவரை விற்பனை செய்து முன்னணியில் இருக்கிறது.

பார்ச்சூன் 500 பட்டியலில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இடம்பெற்றுள்ளது. ஏற்றுமதியில் முதலிடம் வகித்தும் வருகிறோம். நாட்டின் மூன்றாவது பெரிய டிராக்டர் நிறுவனமாகவும், உலக அளவில் 5வது இடத்திலும் இருந்து வருகிறோம்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Advertisement