ராமேஸ்வரத்தில் மத பிரசாரம்; மக்கள் எதிர்ப்பு: போலீசார் சமரசம்

41

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் அருகே, மத பிரசாரம் செய்த கிறிஸ்துவ மத போதகர்களுக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான பத்திரகாளி அம்மன் கோவில் அருகே, கிறிஸ்துவ மத போதகர்கள 10 பேர், மத பிரசாரம் செய்து, நோட்டீஸ்களை வழங்கினர்.

இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, மத போதகர்கள், சற்று துாரம் நகர்ந்து சென்று மீண்டும் பிரசாரம் செய்து, அய்யப்ப பக்தர்களிடம் பிரசார நோட்டீஸ் வழங்கினர். இதனால் அப்பகுதி மக்கள், மத போதகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கு வந்த டவுன் போலீசார், மக்களை சமரசம் செய்து, அங்கிருந்து மத போதகர்களை அனுப்பி வைத்தனர்.

Advertisement