த.வெ.க.,வில் சட்டசபை சீட்டுக்கு, ரூ.10 கோடி வசூல்?
பி ல்டர் காபியை பருகியபடியே, ''ரவுடிகள் புடைசூழ வலம் வரார் ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை மாநகர் மாவட்ட, தி.மு.க.,வில், புதுசா ஒருத்தருக்கு பதவி குடுத்திருக்கா... இவரை சுத்தி எப்பவுமே ரவுடி கும்பல் ஒண்ணு வலம் வர்றது ஓய்...
''இது பத்தி, மாவட்ட கட்சி நிர்வாகத்தை கவனிக்கற, 'மாஜி' அமைச்சருக்கு உளவுத்துறை போலீசாரே, 'நோட்' போட்டு அனுப்பியிருக்கா... கோபமான மாஜி, அந்த நிர்வாகியை கூப்பிட்டு, 'இனி இப்படி இருக்கப்படாது'ன்னு கண்டிச்சிருக்கார் ஓய்...
''ஆனாலும், அவர் திருந்திய மாதிரி தெரியல... சமீபத்துல, தி.மு.க., புள்ளியின் தந்தை நினைவு தின விழாவுல கலந்துக்கிட்ட ரவுடி கும்பல், தி.மு.க., புள்ளியுடன் குரூப் போட்டோ எல்லாம் எடுத்திருக்கு ஓய்...
''இதனால, 'இந்த போட்டோவை காட்டியே, ரவுடி கும்பல் கட்டப்பஞ்சாயத்து பண்ணுமே... இது கூட, தி.மு.க., நிர்வாகிக்கு தெரியாதா'ன்னு கட்சி தொண்டர்கள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''செந்தமிழ்செல்வன், அப்புறமா நானே கூப்பிடுதேன்...'' என, மொபைல் போனை பாக்கெட்டில் வைத்தபடியே வந்த பெரியசாமி அண்ணாச்சி, ''வசூல் மழையில குளிக்காவ வே...'' என்றார்.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, சார் - பதிவாளர் அலுவலகத்துல, ஆவணங்கள் முறையா இருந்தாலும், பத்திரப்பதிவு பண்ணாம இழுத்தடிச்சி, 10,000 முதல், 20,000 ரூபாய் வரை வசூல் பண்ணிட்டு தான், பதிவு பண்ணி குடுக்காவ... குறிப்பா, வில்லங்க சான்றிதழ்ல இருக்கிற சின்ன சின்ன பிழைகளை, பெண் உதவியாளர் பூதக்கண்ணாடி வச்சி கண்டுபிடிச்சி, அதிகாரிகளிடம் சொல்லிடுதாங்க வே...
''அதை வச்சே ரெண்டு அதிகாரிகளும் பேரம் பேசி, ஒரு தொகையை கறந்துடுதாவ... இதனால, இங்க பத்திரம் பதிவு பண்ண வர்றவங்க வெறுத்து போயிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''வாங்க வீரகுமார்... வீட்டுல வெண்ணிலா, ஜெய் எல்லாம் சவுக்கியம் தானேங்க...'' என, நண்பரிடம் நலம் விசாரித்த அந்தோணிசாமி, ''சீட் வாங்க, 10 கோடி பேரம் நடந்திருக்குதுங்க...'' என்றார்.
''எந்த கட்சியில வே...'' என கேட்டார், அண்ணாச்சி.
''திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டசபை தொகுதியில், 2021 தேர்தலில், நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட, 'எக்செல்' நிறுவனத்தின் தலைவர் முருகானந்தம், 15,000 ஓட்டுகள் வாங்கி தோத்துட்டாரு... அப்புறமா, கட்சியில இருந்தே ஒதுங்கிட்டாருங்க...
கடந்த சில மாசங்களா, தொகுதியில் உலா வரும் இவர், 'வர்ற தேர்தல்ல போட்டியிடுவேன்'னு சொல்லிட்டு இருக்காரு...
''இந்த சூழல்ல, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி செயலரா, அருள்ராஜ் என்பவரை நியமிச்சிருக்காங்க... இவரது நியமனத்தை எதிர்த்து, த.வெ.க., இளைஞரணி செயலர் ஜான் டேவிட் என்பவர், தலைமைக்கு புகார் அனுப்பியிருக்காருங்க...
''அதுல, 'அருள்ராஜ், திருவெறும்பூர் தொகுதியில் சீட் வாங்கி தர்றேன்னு சொல்லி, ஒருத்தரிடம், 10 கோடி ரூபாய் பேரம் பேசியிருக்கார்'னு சொல்லியிருக்காரு... இதனால, '10 கோடி ரூபாய் குடுத்து, சீட் வாங்கும் அளவுக்கு செல்வாக்கானவர் முருகானந்தம் மட்டும் தான்... அதனால, த.வெ.க., வேட்பாளரா இங்க முருகானந்தம் போட்டியிடுவார் போலிருக்கே...'ன்னு அந்த கட்சியினர் பேசிட்டு இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.
கூவத்தை கூட சுத்தம் செய்து விடலாம், இந்த அரசியல் சாக்கடையை எவனாலும் சுத்தம் செய்து விட முடியாது. பழசு, புதுசு எல்லாக் கட்சிக்கும் பகல் கொள்ளையடிப்பது என்ற ஓரே கொள்கையில் ஒத்து போயிடும்.
தவெக தேர்தலில் அடியெடுத்து வைக்கும் போதே ஒரு MLA சீட்டுக்கு 10/20 னு வசூல் செய்து சீட் கொடுத்தால் ஜெயித்து வந்தபின் செலவுசெய்த பணத்தை எடுக்க ஊழலில் தான் MLA முயல்வார். புதிய திராவிட ஊழல் கட்சி உருவாக வேண்டுமா..? வாக்காள பெருங்குடி மக்களே. சிந்திப்பீர். செயல்படுவீர்.
தவெக கட்சி ஆட்சியில் அடியெடுத்து வைக்கும்போதே ஒரு ,.MLA சீட்க்கு
இப்படி ஒவ்வொரு கட்சியும் எம்எல்ஏ சீட்டை ஏலம் போட்டு வித்தா எப்படி ஊழலை ஒழிக்க முடியும்.
எம் எல் ஏவுக்கான சீட்டை எந்த கட்சி மார்க்கெட்ல விக்க முன்வரலையோ, அந்த கட்சியை அடையாளம் கண்டு மக்கள் அக்கட்சிக்கு தங்கள் வாக்கை கொடுத்து தேர்ந்தெடுத்தால்தான் ஊழல் ஒழியும்.
வெறும் தூய்மைப்பணியாளர், கடைநிலை ஊழியர் நியமனத்துக்கே 3/5 லட்சம் லஞ்சம் என்று இருக்கையில், 5 வருஷ காலத்தில் கோடிகளில் கொட்டப்போகும் எம் எல் ஏ சீட்டுக்கு 10 கோடி ரொம்ப மலிவுதான்மேலும்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
-
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பிப்., 3 முதல் வேலைநிறுத்தம் 'ஆக்டோ ஜியோ' அறிவிப்பு
-
ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம்
-
கல்வி நிறுவனங்களில் சமத்துவ குழு ஜாதியை வளர்க்கும் யு.ஜி.சி., உத்தரவு