சத்தீஸ்கரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொலை
பிஜப்பூர்: சத்தீஸ்கரில், மூத்த நக்சல் திலிப் பெட்ஜா உட்பட இருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டனர்.
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில், மூத்த நக்சல் திலிப் பெட்ஜா பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சத்தீஸ்கர் மாநில சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கோப்ரா பிரிவினருடன் இணைந்து, நேற்று காலை அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், திலிப் பெட்ஜா மற்றும் ஒரு நக்சல் என இருவர் கொல்லப் பட்டனர்.
தப்பிய நக்சல் தலைவர்களில் ஒருவரான, பாப்பா ராவ் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.4 கோடி கஞ்சா கடத்திய வாலிபர் கைது
-
தொழில் போட்டியில் அ.தி.மு.க., நிர்வாகி கொலை
-
'அம்ரித் பாரத்' பணி சரியில்லை கோட்ட மேலாளர் அதிருப்தி
-
தி.மலை கோவிலில் புரோக்கர்கள் ஆதிக்கம் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?
-
இலங்கைத்தமிழர் முகாம் முன்னாள் தலைவருக்கு வெட்டு
-
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ரூ.13 கோடியில் நடந்த பணிகள்
Advertisement
Advertisement