தேசியம் : தலைவர்கள் பேட்டி
வரியை உயர்த்துங்கள்! ஹிமாச்சலில், மொத்த பழ உற்பத்தியில் ஆப்பிளின் பங்களிப்பு 80 சதவீதம். இது, ஆண்டுக்கு 4,500 கோடி ரூபாய் வருவாயை தரும் நிலையில், இதன் மீதான இறக்குமதி வரி குறைப்பால், 2.50 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆப்பிள் மீதான இறக்குமதி வரியை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். சுக்விந்தர் சிங் சுகு ஹிமாச்சல் முதல்வர், காங்கிரஸ்
துரோகத்தால் வெற்றி! மும்பையை அடமானம் வைக்க பா.ஜ., விரும்புகிறது; துரோகத்தின் மூலம் மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இந்த பாவத்தை, மராத்தி மக்கள் மன்னிக்க மாட்டர். மும்பையில் எங்கள் கட்சியின் மேயரை நி யமிக்க வேண்டும் என்பதே என் கனவு. கடவுள் விரும்பினால், அந்த கனவு நனவாகும். உத்தவ் தாக்கரே தலைவர், சிவசேனா உத்தவ் பிரிவு
பிரிக்க முயற்சி! கடந்த, 1905ல் ஆங்கிலேயர்களால், வங்கம் பிரிக்கப்பட்ட சம்பவத்தை மேற்கு வங்கத்தின் தற்போதைய நிலை நினைவூட்டுகிறது. வங்கதேசத்தையும், அங்குள்ள ரோஹிங்கியா ஊடுருவல்காரர்களையும் பாதுகாக்க, வன்முறையைத் துாண்டி நம் நாட்டில் இருந்து இந்த மாநிலத்தை பிரிக்க, முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார். சம்பித் பத்ரா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
மேலும்
-
குப்பை தொட்டியாக மாறிய குடிநீர் கிணறு
-
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
-
பார் உரிமையாளர் உதவியுடன் மதுபாட்டில்கள் கடத்தல்
-
கோஷ்டி தகராறில் ஏழு பேர் மீது வழக்கு
-
வாட்ஸ் ஆப்பில் லாட்டரி விற்றவர் கைது
-
அதிகரியுங்கள் மக்காச் சோளம் சாகுபடிக்கு மானியம் குறியீட்டை மானாவாரி, இறவை சாகுபடி செய்ய வாய்ப்பு